இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி

Published By: J.G.Stephan

31 Mar, 2019 | 02:58 PM
image

கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு, அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் கடந்த மே 14ஆம் திகதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் குறைக்கப்பட்டு,  போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டுதினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இன்று இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் ஒன்று திரண்டனர்.

இஸ்ரேலில் எதிர்வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது.  பதற்றம் நிறைந்த இந்த சூழலில் எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிறு இளைஞர் குழுக்கள் காசா நகரின் கிழக்கே வேலியை அணுகி அதனை பலமுறை உடைக்க முற்பட்டனர்.  அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டும் பலனில்லாத போது,  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கற்களை வீசி பாலஸ்தீனிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.  இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.  போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17