'வற்' எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தில் பொது மக்களுக்கு எந்த வித அநீதியும் இழைக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்றுவரும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிககையில்,

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள 'வற்' எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தில் பொது மக்களுக்கு எந்த வித அநீதியும் இழைக்கப்படாது.

பொது மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்படுமாயின் வரித் திருத்தம் நீக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.