ஹெரோயின் போதைப்பொருளை தன்னுடன் வைத்திருந்த நபரொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞரே கைதுசெய்யப்பட்டவராவார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2.800 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள்ள கைப்பற்றப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸ் பிரிவின்  சுற்றி வளைப்பு தேடுதலின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.