சீனாவுடனான கலந்துரையாடலில் முன்னேற்றம்:ட்ரம்ப்

Published By: R. Kalaichelvan

30 Mar, 2019 | 04:29 PM
image

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரிகள் விதித்தன. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், சீன ஜனாதிபதி ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள்.

 அப்போது, இருவரும் வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்தும்  வகையில், ஜனவரி 1 ஆம் திகதி முதல் இரு நாடுகளும் ஒன்றின்மீது மற்றொன்று கூடுதல் வரிகளை விதிப்பது இல்லை என்று உடன்பாடு செய்துகொண்டனர்.

 இது 90 நாட்களுக்கு நீடிக்கும். இரு நாடுகள் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  நேற்று முன்தினம் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவினர் வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர், வர்த்தக அமைச்சர் ஸ்டீவன் மனுசின் தலைமையில் சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்  காரணமாக சீனாவுக்கும்,அமெரிக்காவுக்கும் வர்தக ரீதியிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17