போராட்டத்தில் பங்கேற்ற உதவி பேராசிரியர்களுக்கு மை வைக்கும் பணி..!

Published By: Daya

30 Mar, 2019 | 12:48 PM
image

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். அதை மனதில் வைத்துக்கொண்டு, வேண்டுமென்றே எங்களுக்கு இதுபோன்ற பணி ஒதுக்கி அரசு பழிவாங்குகிறது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி உதவி பேராசிரியர் பலருக்கு, வாக்காளர் விரலில் மை வைக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆட்சியை நிர்ணயிப்பதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. சுமார் 13 இலட்ச அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரையும் சேர்த்தால் இந்த மடங்கு சில கோடிகளைத் தாண்டும்.



இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், ‘அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளத்திற்கே போய் விடுகிறது’ என, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதனால் கோபம் அடைந்த அரசு ஊழியர்கள், ‘லோக்சபா தேர்தல் வாக்குபதிவு நாளான ஏப்ரல் 18ஆம் திகதி, ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சியாளருக்கு கசப்பு மருந்து தர வேண்டும். இதற்கு, உங்கள் கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பியிடம் பேசுங்கள்’ என, சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு, அவர்களின் சம்பளம் விகிதம் மற்றும் பதவிகள் அடிப்படையில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை, உதவி பேராசிரியர்களுக்கு வாக்குசாவடி தலைமை அதிகாரி பணி வழங்கப்பட்டது.

அவர்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, போலிங் ஆபீஸர் 1, 2 மற்றும் 3 என்ற நிலைகளில் பணிகள் ஒதுக்கப்பட்டது. போலிங் ஆபீஸர் 3 என்ற நிலை என்பது, சம்பளம் விகிதம் அடிப்படையில் பெரும்பாலும் அங்கன்வாடி பணியாளருக்கு ஒதுக்கப்படும். வாக்களிக்க வரும் வாக்காளர்களின் விரலில் அடையாள மை வைப்பது இவர்களின் பணி.



ஆனால், வரும் ஏப்ரல் 18ஆம் திகதி  நடக்கவுள்ள தேர்தலில் உதவி பேராசிரியர்கள் பலருக்கு போலிங் ஆபீஸர் 2 மற்றும் 3 நிலையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே ஓட்டுச் சாவடியில், அங்கன்வாடி பணியாளர் நிலையில் உள்ளவர்களுக்கு மேல்நிலையில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் தெரிவித்ததாவது,

 “சம்பளம் அடிப்படையில்தான் இதுவரை தலைமை அதிகாரி பணி ஒதுக்கப்பட்டது. ஒரு போலிங் ஆபீஸர்தான் வாக்கு சாவடிக்கு முழு பொறுப்பாக இருப்பார். அனைத்து நிலையிலும் உள்ள பணிகள் விவரம் அவருக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால், உதவி பேராசிரியர் பலருக்கும் விரலில் மை வைக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35