ரோஹண விஜ­ய­வீ­ரவை நினை­வு­கூர முடி­யு­மாயின் பிர­பா­க­ரனை ஏன் நினைவு கூரமுடி­யாது என கேள்வி எழு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் அசாத் சாலி தெரி­வித்­துள்ளார்.

மாவீரர் தினத்தை கொண்­டாட கூடாது எனக் கோரிக்கை விடுக்­கலாம், ஆனால் நினைவு தினத்தை அனுஷ்­டிப்­பதை எதிர்க்க முடி­யாது என அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­கு­மாறு தான் தினம் தினம் அர­சாங்­கத்­திடம் கோரி­வ­ரு­வ­தா­கவும் தற்­போது வரை சிலர் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.
இறந்­த­வர்­களை நினைவு கூரு­வ­தையும் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தையும் பாரிய பிரச்­சினை போல மஹிந்த ராஜ­பக்ஷ, கோத்தபாய ராஜ­பக்ஷ ஆகியோர் மக்கள் மத்­தியில் கொண்டு சென்­ற­தா­கவும் எனினும் அது அவ்­வாறு பார்க்கப்பட வேண்டிய பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.