கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி. காவலில் ஜங்கா, அமில, லலித் விளக்கமறியலில்

Published By: Vishnu

29 Mar, 2019 | 09:01 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட கொழும்பின் பிரபல  பாதாள உலகத் தலைவனும் போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான கஞ்சிபானை இம்ரான் எனபப்டும் 34 வயதான மொஹம்மட்  நஜீம் மொஹம்மட் இம்ரானை சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றது. 

கஞ்சிபானை இம்ரான் தொடர்புப்பட்ட குற்றங்கள்  தொடர்பில் இதன்போது ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

அத்துடன் நேற்று முதல் சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த வாகன உதிரிப்பாக வர்த்தகரான அன்டர்ஷன் பேர்னன்டியஸ் இன்று விடுதலை செய்யப்பட்டள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் குற்றங்கள் எதுவும் வெளிப்படாத நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும்  கஞ்சிபானை இம்ரானுடன் நாடுகடத்தப்பட்டவர்களில் அடங்கும் ஜங்கா மற்றும் ரொட்டும்ப அமில ஆகியோர் முறையே நீர்கொழும்பு மற்றும் மொறவக்க நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும்  ஏபரல் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை  சிறைச் சாலை அதிகாரி லலித் குமார கடந்த மாதம் 27 ஆம் திகதி களுத்துறை எத்தனமடல பகுதியில் இடம்பெற்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீதான தக்குதல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிப்வினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு உட்பட்ட நிலையில் இன்று களுத்துறை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார். 

இதன்போது அவரை எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க களுத்துறை நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47