டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த VMware தீர்வுகளை நிறுவியுள்ள செலான் வங்கி

Published By: Digital Desk 3

29 Mar, 2019 | 04:08 PM
image

செலான் வங்கி VMware இன் vSAN Hyperconverged Infrastructure (HCI) மற்றும்  VMware vRealize Operations Manager ஆகிய தீர்வுகளை நிறுவியுள்ளதாக நிறுவனங்களுக்கான மென்பொருட்கள் வடிவமைப்பில் முன்னணி புத்தாக்க நிறுவனமாக திகழும் VMware, Inc. அறிவித்துள்ளது.

இதனூடாக செலான் வங்கிக்கு துரிதமாகவும், வினைத்திறன் வாய்ந்த வகையிலும் புத்தாக்கமான வங்கியியல் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.

VMware ,இன் vSAN HCI இன் அறிமுகத்துடன், செலான் வங்கி தனது அதிகரித்துச் செல்லும் மொபைல் மற்றும் இணைய வங்கியியல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மொபைல் புரோட்பான்ட் பாவனை 2012 இல் காணப்பட்ட 8% இலிருந்து 2017 இல்  21% ஆக வளர்ச்சியடைந்திருந்தது. அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியிலும் இந்த வளர்ச்சி மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொஃப்ட்லொஜிக் இன்போர்மேஷன் டெக்னொலஜிஸ் உதவியுடன், வங்கி vSAN HCI  மற்றும் Realize Operations Manager தீர்வுகளை நிறுவியிருந்தது. அப்ளிகேஷன்களை இயக்குவது,நிர்வகிப்பது இணைப்பது போன்றவற்றை பொதுவான சூழலில் நிறுவுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. வங்கிக்கு புத்தாக்கத்தை ஏற்படுத்த உதவியதுடன், டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை துரிதமாக அறிமுகம் செய்யவும் வழிகோலியிருந்தது.

VMware இன் தீர்வுகளை நிறுவுவதற்கு முன்னர், வங்கி பாரம்பரிய serverகளிலும் storageகளிலும் தங்கியிருந்ததாக குறிப்பிட்டதுடன், அளவிடல் மற்றும் விரிவாக்கல் திட்டங்களுக்கு இது மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை கொண்டிருந்தது. பாரம்பரிய உட்கட்டமைப்பினூடாக வினைத்திறன் மட்டங்கள் குறைந்திருந்ததுடன், system uptime குறைந்ததுடன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களின் உற்பத்தித்திறனும் பாதிக்கப்பட்டதுடன், server இயங்கும் வேகமும் பாதிக்கப்பட்டிருந்தது.

முன்னர் வன்பொருட்களினால் மாத்திரம் கிடைக்கப்பட்ட மென்பொருளினால் வரையறுக்கப்பட்ட உட்கட்டமைப்பு செயற்பாடுத்தப்பட் சேவைகளுக்கு பிரவேசிக்கும் போது, மென்பொருளினால் வழங்கப்படுகிறது. இதனூடாக server downtime இல்லாமல் செய்யப்பட்டதுடன், அப்ளிகேஷன் கிடைக்கும் தன்மை 90 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருந்தது என நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இயந்திரத்தினால் செயலாற்றுவதனூடாக 70 சதவீத மேம்படுத்தலை காண முடிந்தது. வலு மற்றும் குளிர வைத்தலுக்கு தேவையான சக்தியின் அளவில் குறைவும், கணினி வளங்களை வினைத்திறன் வாய்ந்த வகையில் பயன்படுத்தலும் அதிகரித்தது. மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு வினைத்திறனை வங்கி பதிவு செய்திருந்ததுடன், ஆகக்குறைந்தது ஐந்து மடங்கு சிறந்த உட்கட்டமைப்பையும் பேண முடிந்தது. உரிமையாண்மையின் செலவீனத்தையும் பெருமளவு குறைத்துக் கொள்ள முடிந்ததுடன், server Virtualization மூலமாக இடவசதியை குறைத்து, server பிரசன்னத்தை குறைத்திருந்தது.

செலான் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ வணிகதுங்க கருத்துத் தெரிவிக்கையில் “இணைப்பு மற்றும் சேவை மட்டம் போன்றவற்றில் துறை அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நிலையில், எமது டிஜிட்டல் ஆற்றல் என்பது எமக்கு அதிகளவு வாடிக்கையாளர்களை அடையவும், அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும், எமது வேகத்தை பேணவும் உதவியாக அமைந்துள்ளது. ஏஆறயசந இன் சிறந்த உட்கட்டமைப்பு தீர்வுகள் சாதாரண தகவல் தொழில்நுட்ப தீர்வொன்றுக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. இதனூடாக ஒப்பற்ற போட்டிகரமான அனுகூலம் கிடைப்பதுடன், எமது வியாபார இலக்குகளை எய்துவதற்கும்,இலங்கையின் சிறந்த நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதற்கும் எமக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.” என்றார்.

VMware, SEAK இன் உப தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான சஞ்ஜய் கே. தேஷ்முக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் வங்கியியல் துறை என்பது அதிகளவு வாய்ப்புகளை கொண்டுள்ளது. இதனை மேம்படுத்திக் கொள்ள, நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் சரியான வலையமைப்பு மையத்தை கொண்டிருக்க வேண்டியதுடன், புத்தாக்கத்தை செயற்படுத்தி, துரித வேகமாக இயங்க வேண்டியுள்ளது. செலான் வங்கி இதை சாதகமாக்கிக் கொண்டுள்ளதுடன், வங்கியின் டிஜிட்டல் பயணத்தில் பதிவு செய்துள்ள முன்னேற்றத்தைக் காண்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், வேகமாக பயணிக்க உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.

சொஃப்ட்லொஜிக் இன்ஃபோர்மேஷன் டெக்னொலஜிஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சிதந்த பீரிஸ் தெரிவிக்கையில் “செலான் வங்கி முதலீடுகளை மேற்கொள்ளும் முன்னர் கவனமாக சகல தெரிவுகளையும் மதிப்பீடு செய்திருந்தது. புதிய மென்பொருள் அடிப்படையிலான களஞ்சியப்படுத்தல் உட்கட்டமைப்பு என்பது முன்நோக்கிய செயற்பாட்டுக்கு வழிகோலும் என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். குறித்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு அவர்கள் பெருமளவு வெளிப்படையாகவும், திறந்த மனப்பாங்குடனும் செயலாற்றியிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த வங்கியொன்று இந்த VMware vSAN HCI தொழில்நுட்பத்தை நிறுவியிருந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுடன், இந்த கட்டமைப்பினூடாக வங்கிக்கு ஒப்பற்ற வளர்ச்சியை பதிவு செய்யவும், தமது வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும். VMware உடன் குறித்த அணியினர் பொறுப்பு வாய்ந்த வகையில் செயலாற்றி, நிறுவும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இந்த தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு, செலான் வங்கி - சொஃப்ட்லொஜிக் இன்போர்மேஷன் டெக்னொலஜிஸை தெரிவு செய்தமையையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58