கம்ரெலிய திட்டத்தில் பிரதேச சபைக்குரிய பொறுப்புக்கள் உதாசீனம் செய்யப்படுகின்றது - வலி கிழக்குத் தவிசாளர் 

Published By: Digital Desk 4

28 Mar, 2019 | 05:42 PM
image

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

ஊரெழுச்சித்; ( கம்ரளிய) திட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பில் இன்று (28, வியாழக்கிழமை) வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் பொது அமைப்புக்களுக்கிடையிலான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

இக் கூட்டம் பிரதேச சபையின் தவிசாளருக்கோ சபைக்கோ தெரிவிக்கப்படாது சமூக அமைப்புக்களை பிரதேச செயலகத்திற்கு அழைத்து அவ் வீதிகளுக்கான ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பிலும் மேலும் சில விடங்களும் ஆராயப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊரெழுச்சித் திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் சுற்று நிருபங்களின் பிரகாரம் பிரதேச செயலகம் ஊடாக கையளிக்கப்பட்டிருந்தாலும் சட்ட ரீதியிலும் அதற்கு அப்பாலும் பிரதேச சபைகளுக்கு பெரும் வகிபாகங்கள் உள்ளன. 

பிரதேச சபைகள் தனக்குச் சொந்தமான வீதிகள் என்ற அடிப்படையில் அவ் வீதிகளின் அபிவிருத்திக்கு அவைத் தீர்மானம் வாயிலாக சம்மதிக்க வேண்டியுள்ளது. மேலும் வீதிகளுக்கான தொழிநுட்ப மதிப்பீடுகளை தயாரிக்கும் வகிபாகத்தினையும் பிரதேச சபைகள் கொண்டுள்ளன. 

சமூக நிறுவனங்களில் சனசமூக நிலையங்கள் பிரதேச சபையின் விடயப்பரப்பிற்குள் வருகின்றன. வீதிகளும் எமது விடயப்பரப்பினுள் வருகின்றன என்ற அடிப்படையில் மக்களும் பல கேள்விகளைக்கொண்டுள்ளனர். குறித்த விடயம் பற்றி நடைபெறும் கூட்டங்களில் பிரதேச சபையின் நிறைவேற்று தரத்தில் உள்ள ஒருவரே விளக்கமளிக்க முடியும். 

எனவே எதிர்காலத்தில் உரிய நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு நடவடிக்கைகள் நடைபெறுவதை நாம் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலமே சிக்கல்கள் இன்றி அபிவிருத்தியினை முன்னொடுக்க முடியும். அதுவே காத்திரமான அபிவிருத்தியாகவும் அமையமுடியும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17