பருத்தித்துறை வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல் - மக்கள் விசனம்

Published By: Daya

28 Mar, 2019 | 03:11 PM
image

பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் சத்திர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளர்கள் விடுதிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. 

புதன்கிழமை காலை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்காக 14 நோயாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஐவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை தன்னியக்கமாக இயங்கும் வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கியும் செயலிழந்து காணப்பட்டதால் ஏனைய நோயாளர்கள் சத்திரசிகிச்சை மேற்கொள்ளாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

இதேபோன்று  தகரத்துண்டு வெட்டிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட சிறுவன் ஒருவன் யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

வடமராட்சி , வடமராட்சி கிழக்கு,  தென்மராட்சியின் ஒரு பகுதியினைச்  சேர்ந்த மக்கள் இந்த வைத்தியசாலையை நம்பியே உள்ளனர்.

இருப்பினும் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தும் கூட பழுதடைந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யாதிருக்கின்றமை வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினைக் காண்பிப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27