“5 ஆம் தர புலமைப் பரிசில் குறித்த நிலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும் ”

Published By: Daya

28 Mar, 2019 | 02:52 PM
image

 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறுத்தப்படவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சு மௌனமாக இருப்பதும், பரீட்சைத் திணைக்களம் முறையான அறிவித்தலை விடுக்காமல் இருப்பதும் அரசாங்கத்தின் முரண்பாடான அணுகுமுறைகளை கொள்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்துவதாக உள்ளது என்று இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கல்வி முறைமை வாழ்க்கைக்கு உதவாததாக உள்ளதை பல தடவைகள் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்காகவே பின்லாந்து கல்வி முறையை இங்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றோம்.

பரீட்சைகள் திணைக்களம் 2019ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதியை அறிவித்துள்ள நிலையிலும், அந்த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அரசாங்க நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மாற்றுவழி தேடாமலும், பாடசாலைகளைத் தெரிவுசெய்யும் நடைமுறைகளை அறிவிக்காத நிலையிலும் பரீட்சை நிறுத்துவேன், நிறுத்திவிட்டேன் என ஜனாதிபதி கருத்து வெளியிடுவது பொருத்தமான செயற்பாடு அல்ல.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் செய்வதறியாது குழம்பிப் போயுள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சு நிதியுதவிக்கான வழிமுறைகளையும், பாடசாலைத் தேர்வுக்கான வழிமுறைகளையும் உடனே அறிவித்து தரம் - 5: புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த வேண்டும்.

பல்வேறு தரப்பினரது கருத்துப்படி தரம் - 5: புலமைப்பரிசில் பரீட்சை பொருத்தமற்றது எனக் கண்டறிந்தால் அதற்கான மாற்றுத்திட்டத்தையும் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

பிள்ளைகள் மத்தியில் விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்துவது விமர்சனத்துக்குரியது. 

இலங்கையில் க.பொ.த சாதாரணதரம் வரை கற்ற மாணவன் உயர்தரம் கற்கவில்லை என்றால் அவனுக்கான அடுத்த உபாயம் என்னவென்று தெரியாத நிலையிலும், க.பொ.தஉயர்தரம்வரை கற்று பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையிலும், பல்கலைக்கழக கல்வியை முடித்தவர்கள் தொழிலுக்காக வீதியில் போராடும் நிலையிலும் இலங்கையில் உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54