அரசாங்கம் ஏமாற்றுகின்றதென்றால் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ளாமல் இருப்பது ஏன்? - அனந்தி 

Published By: Daya

28 Mar, 2019 | 02:43 PM
image

அரசாங்கம் ஏமாற்றுகிறது அல்லது பொய் கூறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின்; அரசாங்கத்திற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள கூட்டமைப்பினர் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 

காணாமற்போனோர் விடயத்தில் மட்டுமல்ல பொறுப்புக்கள் அனைத்திலும் தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் இலங்கை அரசு ஏமாற்றி வருகிறது. இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றி வருவதை நாங்கள் தொடர்ச்சியாகவே சுட்டிக்காட்டி வருகின்ற போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிக் கொண்டு தான் வருகின்றது.

இவ்வாறு அரசிற்கு சகல விதத்திலும் ஆதரவை வழங்கி வருவது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கு எதுவும் இல்லாத இந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவை வழங்கியிருக்கிறது. 

ஏனெனில் நிபந்தனையற்ற ஆதரவையே இந்த அரசிற்கு கூட்டமைப்பு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே அரசிற்காக சகல சந்தர்ப்பங்களிலும் தங்களாலான ஆதரவை வழங்கி வருகின்றார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் ஏமாற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இப்போது தேர்தல்கள் வரவிருக்கின்றதால் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருவதாக கூட்டமைப்பினர் கூறி வருகின்றனர். ஆகையினால் அரசாங்கம் பொய் கூறுகின்றதோ அல்லது ஏமாற்றுகின்றதோ என்று உண்மையில் கூட்டமைப்பின் கூறுவார்களாயின் இதற்கு வழங்கி வருகின்ற ஆதரவை விலக்கிக் கொள்வார்களா என்பதுடன் அவ்வாறு விலக்கிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனரா என்று கேட்கின்றோம்.

கூட்டமைப்பின் ஏமாற்று வித்தைச் செயற்பாட்டை மக்கள் இணங்கண்டுள்ளனர் எல்லா காலமுமும் மக்களை ஏமாற்றலாம் என்ற நினைக்க கூடாது என தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56