மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது:உச்ச நீதிமன்றம் 

Published By: R. Kalaichelvan

28 Mar, 2019 | 12:39 PM
image

அரவக்குறிச்சி, திருப்பறங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டபேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் திருப்பறங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளை தவிர்த்து, மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன் இந்த மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இயலாது என்றும் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் திகதியன்றே இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும் என்று தி.மு.கவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. அதில் தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய சட்டத்தரணி, மூன்று தொகுதிகளுக்கும் இடைதேர்தலை அவசரகதியில் நடத்த முடியாது என்று தெரிவித்துவிட்டது. 

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஏப்ரல் 8 திகதியன்று தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மறைவையடுத்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை நான்காக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17