அர­சாங்­கத்தின் மீது மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­னரா? இல்­லையா? என்­பது தொடர்பில் காலி மேதினக் கூட்­டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம் தீர்­மா­னிக்கும் என்று அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ள­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரிவித்தார்.

ஜனா­தி­ப­தியின் பொறு­மைக்கும் எல்­லை­யுண்டு. எனவே கட்­சியின் கட்­டுக்­கோப்பு மீறப்­பட்டால் கடு­மை­யான நட­வ­டிக்­கைகள்

எடுக்­கப்­ப­டு­மென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள சுதந்­திர முன்­ன­ணியின் மேதினக் கூட்டம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் காலியில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் கலந்து கொண்டால் அரசின் மீது அதி­ருப்தி கொண்­டுள்ள மக்கள் கூச்சல் குழப்­பங்­களில் ஈடு­ப­டலாம். எனவே இம் மேதி­னக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட ஆலோ­ச­கரும் குரு­ணா­கலை மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக கேட்­ட­போதே கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ள­ரு­மான மஹிந்த அம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்;

காலியில் இடம்­பெறும் எமது மேதினக் கூட்­டத்­தில் பெரும் தொகை­யான மக்கள் கலந்து கொள்­ள­வுள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று மக்கள் சுதந்­தி­ர­மாக ஜன­நா­யக உரி­மை­க­ளோடு வாழ்­கின்­றனர். கடத்­தல்கள், அடக்­கு­மு­றைகள் இல்லை. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வுக்கு பதில் கூற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சர்­வ­தேச நாடுகள் இலங்­கையில் முத­லீ­டு­களை மேற்­கொள்ள வரி­சையில் உள்­ளன . எனவே நாட்டு மக்கள் அனை­வரும் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அரசின் மீது நம்­பிக்கை வைத்­துள்­ளனர்.

காலியில் இடம்­பெறும் மேதினக் கூட்­டத்தில் அரசின் மீது மக்கள் அதி­ருப்தி கொண்­டுள்­ள­னரா? இல்­லையா என்­பதை பார்த்­துக்­கொள்ள முடியும். இதனை பொறுத்துக் கொள்ள முடி­யா­த­வர்­களே காலிக் கூட்­டத்தில் குழப்­பங்கள் ஏற்­படும் என கனவு காண்­கின்­றார்கள். இவர்­க­ளது கனவு ஒரு போதும் பலிக்­காது.

அதே­வேளை, காலி மேதினக் கூட்­டத்தில் கலந்து கொள்­ளா­த­வர்­க­ளுக்கு எதி­ராக இனியும் பொறுமை காக்க முடி­யாது. அவர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்வோம். இது தொடர்பில் கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுமையும் எல்லை தாண்டிவிட்டது. எனவே கட்சியின் யாப்பை மீற தொடர்ந்து இடமளிக்க முடியாது என்றார்.