ஈக்­கு­வ­டோரை உலுக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி 77 பேர் உயி­ரி­ழப்பு ; 588 பேர் காயம்

Published By: Raam

18 Apr, 2016 | 08:02 AM
image

ஈக்­கு­வ­டோரை கடந்த சனிக்­கி­ழமை இரவு தாக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி குறைந்­தது 77 பேர் பலி­யா­ன­துடன் 588 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

இது ஈக்­கு­வ­டோரை 1979 ஆம் ஆண்­டிற்கு பின்னர் தாக்­கிய மிகப் பெரிய பூமி­ய­திர்ச்­சி­யா­க­வுள்­ளது.

மேற்­படி பூமி­ய­திர்ச்சி வட நக­ரான டுயிஸ்­னி­யி­லி­ருந்து சுமார் 27 கிலோ­மீற்றர் தொலைவில் 19.2 கிலோ­மீற்றர் ஆழத்தில் தாக்­கி­யுள்­ளது.

அந்தப் பூமி­ய­திர்ச்­சியால் அது மையங்­கொண்­டி­ருந்த பிராந்­தி­யத்­தி­லி­ருந்து சுமார் 300 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள குவேகில் நக­ரி­லுள்ள பாலம் அழிவடைந்­துள்­ள­துடன் பிராந்­திய கட்­ட­மைப்­பு­க­ளுக்கும் கடும் சேதம் ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இத்­தா­லிக்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த ஈக்­கு­வடோர் ஜனா­தி­பதி ராபயல் கொர்­ரியா, இந்த பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து தாய்­நாடு திரும்­பி­யுள்ளார். அவர் தனது நாட்டில் அவ­ச­ர­கால நிலை­மை­யொன்றைப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

"இது மிகவும் வேதனை மிக்க தருணமாகவுள்­ளது. நாட்டு மக்­களை அமை­தி­யு­டனும் ஐக்­கி­யத்­து­டனும் இருக்க கோரு­கிறேன். இதனால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளி­லி­ருந்து மீள நாம் பல­மாக இருப்­பது அவ­சி­ய­மா­க­வுள்­ளது" என அவர் கூறினார்.

“வீதி­க­ளையும் மருத்­து­வ­ம­னை­க­ளையும் மீள நிர்­மா­ணிக்க முடியும். ஆனால் இழந்த உயிர்­களை நாம் மீளப்­பெற முடி­யாது. அதுவே மிகவும் வேதனை தரும் இழப்­பா­க­வுள்­ளது" என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் பாதிக்­கப்­பட்ட பின்­தங்­கிய பிராந்­தி­யங்­களைச் சென்­ற­டை­வது சிர­ம­மா­க­வுள்­ளதால் அங்கு ஏற்­பட்ட பாதிப்­பு­களை அறிய முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பூமி­ய­திர்ச்­சியால் மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள பொர்­தோ­விஜோ பிராந்­தி­யத்­தி­லுள்ள பல கட்­ட­டங்கள் தரை­மட்­ட­மா­கி­யுள்­ள­தா­கவும் அங்­குள்ள குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் குழுக்கள் நிலை­மையை தமக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி கொள்­ளை­யிடும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அதே­ச­மயம் பூமி­ய­திர்ச்சி கார­ண­மாக பிறி­தொரு நக­ரான பெடர் னேல் முழு­மை­யாக தரை­மட்­ட­மா­கி­யுள்­ள­தாக அந்த நகரின் மேயர் கப்­றியல் அல்­சிவார் தெரிவித்தார்.

இந்தப் பூமியதிர்ச்சியையடுத்து பிறப்பிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சி தொடர்பில் அயல் நாடான பெருவின் வட கடற்கரைப் பிராந்தியங்களிலும் சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13