இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­த­ர­மான தீர்வு வருட இறுதிக்குள் வரும்

Published By: Raam

18 Apr, 2016 | 07:40 AM
image

இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­த­ர­மான தீர்­வினை பெற்­றுத்­த­ரு­வ­தற்­கான செயற்­பாட்டில் அல்­லது கரு­மத்தில் தாமதம் ஏற்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­பி­ரச்சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வினை பெற்­றுத்­தர விரும்­பு­கிறார். அவ­ருக்கு உத­வி­யாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் உள்ளார். எனவே இவ்­வி­ட­யத்தில் அனை­வரும் விசு­வா­ச­மாக செயற்­பட்டால் இந்த கருமம் இந்த வரு­டத்­துக்­குள்­ளேயே முடி­வ­டையும் என்று நினைக்­கின்றேன் என எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தின் பாதிப்பு தொடர்பில் இலங்கை மற்றும் இந்­திய அர­சாங்­கங்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும். போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகின்­ற­போதும் இன்றும் பல இடங்­களில் மக்கள் குடி­யே­ற­மு­டி­ய­வில்லை. காணிப்­பி­ரச்­ச­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இரா­ணுவ பர­சன்னம் குறைக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த எதிர்க்சி தலைவர் இரா.சம்­பந்தன் நேற்­றை­ய­தினம் காலை நடத்­திய சந்­திப்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது கடந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போது 2016ஆம் ஆண்­டுக்குள் இன்­பி­ரச்­ச­னைக்­கான நிரந்த தீர்வை பெற்று தரு­வ­தாக கூறி­யி­ருந்த நிலையில் அதன் முயற்சி தற்­போது எவ்­வாறு உள்­ளது என்­பது தொடர்­பாக ஊட­க­வி­யா­லாளர் ஒருவர் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார்.

இச் சந்­திப்பில் மேலும் அவர் குறிப்­பி­டு­கையில்

2016ஆம் ஆண்­டுக்குள் தீர்வு

2016ஆம் ஆண்­டுக்குள் தீர்­வுத்­திட்­டத்தை பெற்­றுத்­த­ருவேன். எனினும் தீர்­வுத்­திட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வது நானல்ல அதனை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சில நட­வ­டிக்­கைகள் உண்டு. சில கரு­மங்கள் அதற்­காக நடந்­தாக வேண்டும்.

தற்­போது மஹிந்த தலை­மை­யி­லான ஆட்சி மாறி மைத்­திரி தலை­மை­யி­லான ஆட்சி ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­தபி மைத்­தி­ரி­பால மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரு­வரும் இப்­பி­ரச்­ச­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வினை காண விரும்­பு­கின்­றனர். மைத்­திரி தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியும் பெரும்­பான்மை பலத்தை பெறா­விட்­டாலும் கூட எங்­க­ளு­டைய உத­வி­யுடன் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை அடைய கூடிய நிலையில் இருக்­கி­றார்கள்.

ஆகவே இந்த கரு­மத்தில் தாமதம் ஏற்­ப­ட­வில்லை. விசு­வா­ச­மாக எல்­லோரும் செயற்­பட்­டால்­இந்த கருமம் இந்த வரு­டத்­துக்­குள்­ளேயே முடி­வ­டையும். அவ்­வி­த­மாக முடி­வ­டைந்தால் நல்­லது. ஏனெனில் அவ்­வாறு முடி­வ­டைந்தால் பிரச்­ச­னையை அதிகம் பாதிக்­கப்­ப­டா­மலும் குழப்­பா­மலும் தீர்க்­கலாம். இவ்­வி­டத்தில் ஊட­கங்­களும் குழப்­பக்­கூ­டாது.

சம்பூர் அனல் மின்­னி­லையம்

எமது மக்கள் நீண்­ட­கா­ல­மாக போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இலங்கை சுதந்­திரம் அடைந்த காலத்தில் இருந்தே போரா­டி­வ­ரு­கின்­றார்கள். இந்­நி­லையில் திரு­கோ­ண­மலை சம்பூர் பகு­தியில் உச்ச நீதி­மன்ற தீர்ப்­பயைும் மீறி பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­யையும் மீறி கடந்த அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­பட்ட 818 ஏக்கர் காணியும் கடற்­படை முகாமும் நீக்­கப்­பட்டு கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் இருந்து மக்கள் மீளக்­கு­டி­யேறி வரு­கின்­றனர்.

ஆனால் மீத­முள்ள 500 ஏக்கர் காணி­களே அனல்மின் நிலையம் அமைப்­பற்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. அதில் தற்­போது வரை எந்த மாற்­றமும் இல்லை. அத்­துடன் அதில் வசித்த 7 குடும்­பங்­க­ளுக்கு வேறு இடத்தில் காணிகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனாலும் அங்கு அனல் மின்­நி­லையம் அமைக்­கப்­ப­டு­வ­தனால் பாதிப்­புக்கள் ஏற்­படும் என அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வி­ட­யத்­திலே உண்­மை­இல்லை. என கூற­மு­டி­யாது. அதில் உண்­மை­யுண்டு. நான் விசா­ரித்த அள­விலே அதில்­இ­ருந்து வெளி­யாகும் சில இர­சா­யன தூதுகள் மற்றும் சாம்­பல்­களால் பாதிப்­புண்டு.

எனவே இது பரி­சீ­லிக்­கப்­ப­ட­வேண்­டிய விடயம். இது தொடர்பில் நாம் பரி­சீ­லித்து வரு­கின்றோம். அத்­துடன் அர­சாங்­கத்­துடன் இது குறித்து பேசுவோம். இந்­திய அர­சாங்­கத்­து­டனும் பேசுவோம். மக்­க­ளு­டனும் நிபு­ணர்­களும் பேசி கலந்­தா­லோ­சித்தே ஓர் முடி­வுக்கு வருவோம்.

வட­மா­காண சபையின் அமைச்­ச­ரவை மாற்றம்

வட­மா­கா­ணத்தின் அமைச்­சர்­களை மாற்ற வேண்டும் என்­பது தொடர்பில் 16 உறுப்­பி­னர்­களால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை குறித்து முத­ல­மைச்­ச­ருடன், அமைச்­சர்­க­ளுடன் சபை முதல்­வ­ருடன் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுடன் பேசப்­படும்.

இது தேவையா இல்­லையா அல்­லது தேவை­யென்றால் அது என்ன வித­மாக கையா­ளப்­ப­ட­வேண்டும் என்று தொடர்­பாக ஆரா­யப்­படும். மாகாண சபையின் இரண்­டறை வரு­டங்­க­ளுக்கு அமைச்­ச­ர­வையை மாற்­றி­ய­மைப்­பது தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை உறுப்­பி­னர்­களின் ஜன­நா­யக உரிமை. எனவே இது தொடர்பில் பரி­சீ­லிக்­கப்­படும். இது தொடர்பில் மேல­தி­க­மாக கூறு­வ­தற்கு எதுவும் இல்லை.

பொருத்து வீட்­டுத்­திட்டம்

பொருத்து வீட்­டுத்­திட்டம் தொடர்பில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு தனது ஆட்­சோ­ப­னையை தெரி­வித்­துள்­ளது. இது தெடர்பில் என்­னு­டைய கருத்து, பொருத்து வீட்­டுத்­திட்டம் எமது மக்­க­ளுக்கு பொருத்­த­மாக இல்லை என்­ப­தாகும். எனவே எமது மக்கள் காலம் கால­மாக பரம்­பரை பரம்­ப­ரை­யாக கல்­வீ­டு­களில் வாழ்ந்­த­வர்கள் அது அவர்­களின் பாரம்­ப­ரிய கலா­சாரம் முக்­கியம் வாய்ந்­தது.

மேலும் இவ்­வி­த­மான பொருத்து வீடுகள் இந்­நாட்டில் எங்கும் கட்­டப்­ப­ட­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாச காலத்தில் பல்­வேறு வித­மான வீட்­டுத்­திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போதும் எங்கு பொருத்தும் வீடுகள் கட்­டப்­ப­ட­வில்லை.

அத்­துடன் இவ்­வீடு சாதா­ரண வீட்­டினை கட்­டு­வ­தற்கு ஏற்­படும் செல­வினை போன்று இரு­ம­டங்கு அதி­க­மா­க­வுள்­ளது. எனவே இது தொடர்பில் எமது கருத்­துக்­களை முன்­வைத்து ஓர் தீர்­வினை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

அர­சியல் சாசன வரைபு

அர­சி­ய­ல­ய­மைப்பு செயற்­பாட்டில் நாங்கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றோம். மக்­க­ளுக்கு என்ன தேவை­யென்று எங்­க­ளுக்கு தெரியும் . இதன்­படி நிரந்­த­ர­மான நியா­ய­மான நட­மு­றைப்­ப­டுத்த கூடிய நீடிக்­கக்­கூ­டிய ஓர் அர­சியல் தீர்வே ஏற்­பட வேண்டும். அது மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் ஏற்­பட வேண்டும். அது அவர்­களின் பிறப்­பு­ரிமை உட்­பட சகல உரி­மை­க­ளையும் பெறக்­கூ­டிய ஆட்­சி­மு­றை­யாக அமை­ய­வேண்டும்.

எனவே எங்கள் மக்கள் மீது தீர்வு திட்­டத்தை திணிக்க மாட்டோம். அது தொடர்பில் மக்­க­ளிடம் கலந்­து­ரை­யா­டியே முடி­வெ­டுப்போம். என்றார்.

கேள்வி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன எதிர்­கட்சி தலைவர் ஒட்டு மொத்த நாட்டு மக்­க­ளு­டைய பிரச்­ச­னைகள் தொடர்­பா­க­பே­சு­வ­தில்லை என்றும் தமிழ் மக்கள் சார்­பாக மட்­டுமே போசு­வ­தா­கவும் குற்றம் சாட்­டி­யுள்­ளாரே

பதில் தன்னை பொது எதி­ர­ணியின் உறுப்­பினர் என வர்­ணித்து கொண்­டி­ருக்கும் தினேஸ் குண­வர்த்­த­னவில் ஒவ்­வொரு கருத்­துக்­கும்நான் பதில் சொல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவ்­வாறு பதில் சொல்­லவும் மாட்டேன்.

மேலும் வடக்கு கிழக்கு என்­பது இந்­நாட்டின் ஓர் பிர­தேசம். ஓர் பகுதி. நான் இப்­ப­குதி தொடர்­பாக பாரா­ளு­மன்­றிலோ வெ ளியிலோ பேசினால் அதன் அர்த்தம் நான் நாட்­டினை பற்றி பேசு­கிறேன் என்­ப­தே­யாகும்.

தினேஸ் குண­வர்த்­தன பேசு­வது தனது சொந்த பகு­தியை பற்­றியே அன்­றி­அவர் வடக்கு கிழக்கை பற்றி பேசு­கி­றாரா? எனவே தினேஸ் குண­வர்த்­தன எங்­களை வழி­ந­டத்த முடி­யாது. அதற்கு அவ­ரிற்கு தகு­தியும் இல்லை. உரித்தும் இல்லை.

கேள்வி தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் இணக்க அர­சி­யலை நடாத்தி தனது பெரு­மை­களை மட்­டுமே தேடிக்­கொள்­கி­றதே தவிர மக்­க­ளது பிரச்­ச­னை­களை கருத்தில் எடுக்­க­வில்லை என குற்றம் சாட்­டி­யுள்­ளாரே?

பதில் எல்­லோ­ரு­டைய கேள்­வி­க­ளுக்கும் பதில் சொல்ல முடி­யாது. இவர் குழம்­பிய குட்­டைக்குள் மீன் பிடிக்க பார்க்­கிறார். எனவே அவ­ரை­பற்றி கேட்­டுப்­ப­ய­னேதும் இல்லை.

நாங்கள் ஓர் பாதையில் இலக்கை நோக்கி போகின்றோம். நாங்கள் அவ் இலக்கை போய் சேர­வேண்டும். அந்த வகையில் அதனை தடை செய்ய பலர் முயற்­சிக்­கி­றார்கள். அத்­த­கை­ய­வர்கள் எங்கள் பகு­தி­யிலும் இருக்­கி­றா­ரார்கள்.

கேள்வி வடக்கு கிழக்கு தமிழர் காணி விடு­விப்பு போன்ற விட­யங்­களில் பாது­காப்பு என்ற போர்­வையில் தடைகள் காணப்­படும் போது இத் தடைகள் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு முட்­டுக்­க­டை­யாக இருக்­காது என நம்­பு­கி­றீர்­களா?

பதில் இக்­க­ருத்தை நான் முழு­யை­மாக ஏற்­றுக்­கொள்­ளா­விட்­டாலும் இதில்­ஓ­ர­ளவு உண்­மை­யுண்டு. ஆனாலும் எதுவும் நடை­ப­றெ­வு­மில்லை. எனவும் கூற­மு­டி­யாது. பல கரு­மங்கள் நடை­பெற்­றுள்­ளன.

ஆனால் எமது மக்கள் நீண்­ட­கா­ல­மாக கஷ்­டப்­ப­டு­கி­றார்கள். போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் ஆகின்­ற­போதும் இன்றும் பல இடங்­களில் மக்கள் குடி­யே­ற­மு­டி­ய­வில்லை. காணிப்­பி­ரச்­ச­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. இரா­ணுவ பர­சன்னம் குறைக்கப்படவேண்டும்.

அத்துடன் இராணுவம் தாமும் பயன்படுத்தாமல் மக்களிடமும் வழங்காமல் தங்கள் மேற்பார்வையில் பல காணிகளை வைத்துள்ளார்கள். இந்த நிலமை தொடரகூடாது.

மேலும் தற்போதைய அரசாங்கத்தினால் அல்லது மைத்திரிபால சிறிசேனவால் ஒன்றும் செய்யப்படவில்லை என நான் சொல்லமாட்டேன். ஏனெனில் பல விடயங்கள் நடந்து இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியில் இருந்திருந்தால் அது நடந்திருக்காது. தற்போது போல் உள்ள நிலைமை 100 மடங்கு மோசமானதாக இருந்திருக்கும். எனவே இத்தகைய நிலைமைகளை மக்கள் உணரவேண்டியது அவசியம்.

ஏனெனில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆகவே தற்போதைய அரசாங்கத்துக்கு கவனமாக செயற்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனாலும் எமது மக்களின் கஷ்டங்கள் தொடர முடியாது. இம்முறை யாழ்ப்பாணம் சென்றதனால் மக்களுடைய பிரச்சனைகள் பலவற்றை மேலதிகமாக தெரிந்துகொண்டேன். அத்துடன் அதற்கான தீர்வுக்கான எமது முயற்சிகள் தொடரும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58