பாக் ஜலசந்தியை நீந்திக் கடக்கவுள்ள 10 வயது சிறுவன்

Published By: Digital Desk 4

27 Mar, 2019 | 05:48 PM
image

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது மாணவர் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தன்து சாதனைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அதிக நீரோட்டம் உள்ள பாக் ஜலசந்தி கடலில், மார்ச் முதல் மே மாதம் வரை நீரோட்டம் மற்றும் அலையின் வேகம் குறைவாக இருக்கும். இந்த மாதங்களில் நீச்சல் வீரர்கள், தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை (30 கி.மீ.) நீந்தி சாதனை படைப்பது வழக்கம்.

இந்நிலையில், தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜெய்ஜஸ்வந்த் (10) என்பவர் குறித்த  பகுதியில் நீந்தி சாதனையை படைக்க உள்ளார். இவர், தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். சிறுவயது முதல் நீச்சல் பயின்ற இவருக்கு, நீச்சலில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக, பயிற்சியாளர் விஜயகுமார் ஆலோசனையில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது, தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலில் நீந்த முடிவு செய்தார். இதற்காக இன்று (27 ஆம் திகதி), ராமேஸ்வரத்தில் இருந்து மாணவர் ஜெய்ஜஸ்வந்த், அவருடைய தந்தை மற்றும் பயிற்சியாளர், வழிகாட்டு குழுக்கள் 15 பேருடன் விசைப்படகில் தலைமன்னாருக்கு பயணிக்கின்றார்.

இந்நிலையில் நாளை (28 ஆம் திகதி) அதிகாலை 2 முதல் 3 மணிக்குள், மாணவர் ஜெய்ஜஸ்வந்த் கடலில் குதித்து நீந்தி, மாலை 4 மணிக்குள் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்றடையவுள்ளார்.. 1994ம் ஆண்டு, குற்றாலீஸ்வரன் என்பவர் தனது 12வது வயதில் இக்கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்தார். ஆனால் 10 வயது மாணவன் ஜெய்ஜஸ்வந்த், 15 மணி நேரத்திற்குள் நீந்திவந்து அந்த சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52