கனிமொழி வெற்றிபெற கோயில்களை சுற்றும் ராஜாத்தி

Published By: Daya

27 Mar, 2019 | 03:44 PM
image

துாத்துக்குடியில் போட்டியிடும் மகள் கனிமொழி வெற்றிபெற வேண்டி, அவருடைய தாயார் ராஜாத்தி, திருச்செந்துார் மற்றும் வனதிருப்பதி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். 

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காக அவர், தனது தாயார் ராஜாத்தியுடன் துாத்துக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த 25ஆம் திகதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த கனிமொழி, தினமும் தொகுதியின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்காளர்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரச்சாரத்திற்காக கனிமொழி புறப்பட்டுச் சென்றவுடன் தாயார் ராஜாத்தி, பல்வேறு கோயில்களுக்குச் சென்று, மகளின் வெற்றிக்காக வழிபட்டு வருகிறார். அதன்படி, நேற்று 26ஆம் திகதி காலையில் திருச்செந்துார் முருகன் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடந்த சண்முகா அர்ச்சனையில் கலந்து கொண்டு மனமுருகி வழிபட்டார்.

பின்னர், கோயில் உட்பிரகாரத்தில் உள்ள மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, புன்னை நகரில் அமைந்துள்ள வனதிருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் தெரிவிக்கையில்,

“தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் எனது மகள் கனிமொழி வெற்றிபெற வேண்டும் என சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன். நிச்சயமாக அவர் வெற்றிபெறுவார்'' என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13