தனியார் பஸ்களுக்கு நீலநிறப் பூச்சு : ஏப்ரலில் இருந்து அமுலாக்க தீர்மானம்

Published By: Digital Desk 3

27 Mar, 2019 | 04:10 PM
image

மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களுக்கும் நீல நிறப் பூச்சு பூசுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்கான புதிய சட்டங்களை அறிமுப்படுத்தவுள்ளதாகவும் அச்சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டு மாதங்களில் தனியார்  பஸ்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர், ஓவியங்கள், ஒலி எழுப்பக் கூடிய சாதனங்கள் மற்றும் பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி சாதனங்கள் தவிர்ந்த ஏனைய ஒலி  சாதனங்கள்  போன்றவற்றை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வீதிப் போக்கவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்தன இது தொடர்பாக கருத்த  தெரிவிக்கையில்,

தனியார்  பஸ்கள் தனித்துவமான நீல நிறத்தில் இருந்தால் அதனை எளிதாக இனங்கண்டு கொள்ளலாம். நீல நிறத்தை  தெரிவு செய்தமைக்கு காரணம்  நீலம்  கண்களுக்கு இதமானதாக இருப்பதால் வீதி விபத்துக்களை ஓரளவிற்கு  குறைக்க முடியும்.

பெரும்பாலான விபத்துக்களை  வண்ணமயான  பஸ்கள் மற்றும் அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்ஸ் ஆகியன ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில் இவற்றினால் பஸ்  ஓட்டுனர்களின் கவனம்  சிதறடிக்கப்படுகின்றது.

மேலும் பொதுப் போக்குவரத்திலீடுபடும் தனியார் பஸ்களில் மோட்டார் வண்டி போக்குவரத்து திணைக்களத்தினால்  அங்கீகரிக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு கூடுதல் பொருட்களை அகற்றுவதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

தனியார் பஸ்ஸில் பயணிப்பதற்கு பயணிகள் சரியான சூழலைக் கொண்டிருப்பது அவசியம் என்றும், கர்ப்பிணி பெண்கள், மதகுருமார்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்கு ஆசனங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில்  மட்டும் சுமார் 6 ஆயிரம் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்கள் 475 பஸ் வழித்தடத்தில் இயங்குகின்றன.

புதிய சட்டதிட்டங்களை  மீறுவோர்  மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும் அதாவது வழித்தட அனுமதிகள் இரத்து செய்யப்படும் அல்லது இடைநீக்கம் செய்யப்படும் எனவும் மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06