104 வயது முதியவரின் ஆசை.....!

Published By: R. Kalaichelvan

27 Mar, 2019 | 10:58 AM
image

இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள பிரிஸ்டல் நகரத்தில் உள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் உள்ள முதியவர் தனது ஆசை தான் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட வேண்டுமென எழுதியுள்ளார்.

குறித்த பராமரிப்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற அண்மையில் பராமரிப்பு இல்ல முகாமைத்துவம் முடிவெடுத்தது.

 அவர்களின் ஆசையை ஒரு கடதாசியில் எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்றில் போடப்பட்டது.

அனைத்து முதியவர்களும் விதவிதமான தங்களின் ஆசைகளைத் தெரிவித்தனர். அதில் அன்னி புரோக்கன் என்ற முதியவரின் ஆசை வித்தியாசமாக இருந்தது.

அன்னி புரோக்கன் என்ற 104 வயதான முதியவரின் நீண்ட நாள் ஆசையாக “வாழ்க்கையில் ஒருமுறையாவது தன்னை பொலிஸார் கைதுசெய்யவேண்டும் என அவர் எழுதியுள்ளார்.

மேலும் வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மதித்துப் பின்பற்றி நடந்த நான், இதுவரை பொலிஸாரிடம் சிக்கியதில்லை. இதனால் என்னுடைய ஆசை பொலிஸாரிடம் கைதாக வேண்டும் என்பதுதான்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய குறித்த செய்தியை பராமரிப்பு இல்லத்தின் நிர்வாகிகள் உள்ளூர் பொலிஸாரிடம் தெரிவித்தினர்.

104 வயதான முதியவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற  நோக்கில் பொலிஸார் முதியவரை அவர்களின் வாகனத்தில் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

இது குறித்து மேலும் முதியவர் தெரிவிக்கையில்,

''இந்த நாள் மிகவும் இனிமையானது. சுவாரஸ்யமாகக் கழிந்தது. இந்த அனுபவம் இதுவரை எனக்குக் கிடைத்ததில்லை. அவர்கள் என் கைகளில் விலங்கு போட்டுக் கைது செய்தனர். அப்போது நிறைவாக உணர்ந்தேன் என  அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right