மாற்றுத்திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை - வடக்கு ஆளுநர்

Published By: Daya

27 Mar, 2019 | 09:16 AM
image

வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாக கொண்டு கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கான பணிப்புரையை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தீர்மானித்துள்ளார்.

நேற்று 26 காலை திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கான திடீர் கண்காணிப்பு விஜயத்தின்போது அம்மாச்சி உணவகத்தின் நுழைவாயில் பகுதியில் கருவி நிறுவனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மாற்றுத்திறனாளி ஒருவருரை சந்திக்கும் சந்தர்ப்பம்  ஆளுநருக்கு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கருவி மாற்றுத்திறனாளிகள் சமூக வள நிலையத்தின் நிர்வாகிகளை நேற்று மாலை சந்தித்த ஆளுநர் இந்நிலையம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், மாற்றுத்திறனாளிகளின் சமூக மேம்பாட்டுக்கு எவ்வித தன்நலனும் இல்லாமல் இந்நிலையம் மேற்கொண்டுவரும் சமூகப் பணிக்கு உறுதுணை வழங்குவதாக உறுதியளித்ததுடன், முதற்கட்டமாக கருவி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திகளை வடமாகாணத்தின் அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை உடனடியாக கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

அத்தோடு ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நிதியுதவியுடன் இந்நிலையத்தின் உற்பத்தியினை விரிவுபடுத்துவதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை தமது நிறுவனத்தின் அலுவலகமொன்றினை அமைப்பதற்கு நிரந்தர இடமொன்றினை யாழ் நகருக்கு அண்மையில் பெற்றுத்தருமாறும் அது மாற்றுத்திறனாளிகள் இலகுவில் வந்துபோவதற்கு வசதியான ஒரு இடத்தில் இருப்பதனை உறுதிப்படுத்துமாறும் அதற்கான பணத்தினை தாமே தமது நிலையத்தினூடாக வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கருவி நிலையத்தின் நிர்வாகிகள் ஆளுநரை கேட்டுக்கொண்டதுடன், மிக விரைவில் பொருத்தமான இடத்தில் அதனையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை தமது தொழிற்சாலையினை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியின் ஒரு பகுதியினை இன்னுமொருவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி வைத்துள்ளதன் காரணமாக நிரந்தர தொழிற்சாலையொன்றினை அமைக்க முடியாயாமல் இருக்கும் பிரச்சினை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்த கருவி நிர்வாகிகள் இந்தப் பிரச்சினையை தீர்த்துத் தருமாறும் கோரிக்கையினை முன் வைத்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் ஆளுநர் அவர்கள் உறுதியளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55