ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியட்நாம் பிரதமர் ஆகியோருக்கு ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

(ரொபட் அன்டனி)