கமல்ஹாசனின் அரசியல் கட்சியும் இந்திய தேர்தலும்

Published By: Digital Desk 4

26 Mar, 2019 | 07:26 PM
image

இறுதி கணக்கெடுப்பின்படி 1800 க்கும் அதிகமான  அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையகத்தில் பதிவுசெய்திருக்கின்றன.ஆனால், இந்த எண்ணிக்கை நாட்டில் கட்சியொன்றை கட்டிவளர்த்து நிலைநிறுத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற  சவால்களைப் பொய்யாக்கிவிடுகிறது.

வரலாற்றுரீதியாக நோக்குகையில், வர்த்தகத்துறையில் அல்லது அரசியலில் புதிதாக தொடங்கப்படுகின்ற அமைப்புகள் வீழ்ச்சிகண்டுபோகின்ற வீதம் மிகவும்  உயர்வாகவே இருந்துவந்திருக்கின்றது. 

அதனால், பதிதாக அமைக்கப்பட்ட கட்சியொன்று தப்பிப்பிழைத்து வளர்ச்சியடைதை உறுதிசெய்கின்ற காரணிகளை நோக்குவது மிகுந்த அவாவைத் தூண்டுகின்ற ஒன்றாகும்.

தமிழ்நாட்டில்  நடிகர் கமல் ஹாசனால் ஒரு வருடத்துக்கு முன்னர் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் என்ற பெயரிலான அரசியல் கட்சியை எடுத்துக்கொள்வோம். மாநிலத்தின் அரசியல் அரங்கு பாரம்பரியமாக வெவ்வேறு கோட்பாடுகளைப்  பின்பற்றுகின்றவர்களைக் கொண்ட பெருவாரியான கழகங்களின் ஆதிக்கத்தில் இருந்துவருகிறது. 

தமிழ்த் தேசியவாதத்தை தீவிரமாக ஆதரிக்கின்றவை உட்பட குறிப்பிட்ட சாதிகளை, மதங்களைச் சேர்ந்தவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் -- தீவிர வலதுசாரிகள் தொடங்கி தீவிர இடதுசாரிகள் வரை -- என்று வெவ்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் குழுக்களை நோக்கிச் செயற்படுகின்ற கட்சிகள் இருக்கின்றன.அதுவிடயத்தில்  தமிழ்நாடு நெரிசல்மிக்க ஒரு மாநிலமாக விளங்குகிறது.

கமல் ஹாசன் போன்ற மக்கள் கவர்ச்சியும் பிரபல்யமும்கொண்ட ஒருவரை தலைவராகக் கொண்டிருக்கின்றது என்பதற்காக ஒரு கட்சியின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுவிடாது. வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறுவதற்கு நிறுவனரீதியான கட்டமைப்பும் அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செயற்படக்கூடிய வலுவான தொண்டர்கள் அணியும் அவசியமாகும். இதன் காரணத்தினால்தான் கமல் ஹாசனின் சகாவான திரைப்படநடிகர் ரஜினிகாந்த் ஒழுங்கான கட்டமைப்பு ஒன்று இல்லாமல்  அரசியல் களத்தில் குதிக்கத் தயங்கிக்கொண்டிருக்கிறார்.

2014 பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பெருவெற்றிக்கு அரசியல் செயற்களத்தில் அதற்கு வாக்குச்சாவடி மட்டத்தில் இருந்த முகாமைத்துவமும் கட்சியின் கோட்பாட்டில் கடும் உறுதிப்பாடுகொண்ட தொண்டர்களுமே முக்கிய காரணம். இதை ஏனைய கட்சிகளும் பின்பற்ற முயற்சித்தன.வலுவான இயக்கக் கட்டமைப்பு ஒன்றும் மக்களுக்கு நனகு தெரிந்த வேட்பாளர்களும் இல்லாதநிலையில், மக்கள் நீதி மய்யம் முற்றுமுழுதாக கமல் ஹாசனின் செல்வாக்கிலும் மக்கள் கவர்ச்சியிலுமே தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

அதன் காரணத்தினால்தான் அவர் எந்தவொரு தொகுதியிலும் வேட்பாளராகக் களமிறங்காதிருக்கத் தீர்மானித்தார். "தனது கட்சியின் சகல வேட்பாளர்களுமே எனது முகங்கள்தான்.நான் பல்லக்கை காவிச்செல்வதில் பெருமையடைகின்றேனே தவிர அதில் ஏறி அமர்ந்திருக்க விரும்பவில்லை " என்று அவர் கூறியிருக்கிறார்.

தான் தேர்தலில் போட்டியிட்டால் தனது ஒரு தொகுதிக்குள்ளேயே கவனத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதையும் வேறு  முக்கியமான பிரசாரப்பேச்சாளர்கள் இல்லாத நிலையில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதையும் கமல் ஹாசன் புரிந்துகொண்டிருக்கிறார்.தனது கட்சியின் வேட்பாளர்களுக்காக சகல தொகுதிகளுக்கும் தானே சென்று பிரசாரம் செய்யவேண்டும் என்று அவர் நம்புகிறார். தெளிவான கோட்பாடும் அர்பணிப்புடன் பணியாற்றக்கூடிய தொண்டர்களும் தொலைநோக்குடைய தலைமைத்துவமும் மாத்திரமே ஒரு அரசியல் கட்சியை செழிப்பாக வளர அனுமதிக்கும்.

( இந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கம், 26 மார்ச் 2019)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41