மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு: ஐ.நா.

Published By: Daya

26 Mar, 2019 | 04:58 PM
image

இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் மாத்திரம் சுமார் 1.85 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்ரியன் றோத்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை இதனை அறிவித்துள்ளார்.

இடாய் சூறாவளியினால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பலர் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மொஸம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை இடாய் சூறாவளி கடந்த 14ஆம் திகதி தாக்கியது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் நாடு பேரழிவை எதிர்நோக்கியது.

அதனை தொடர்ந்து இடாய் சிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளையும் தாக்கியிருந்தது. இவ்வாறாக மூன்று நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய இடாய் சூறாவளியினால் சுமார் 686 பேர் உயிரிழந்தனர்.

மூன்று நாடுகளில் மொஸம்பிக் குடியரசே கடும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பல்லாயிரக் கணக்கான வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47