கற்பித்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கௌரவித்த விமானியான மாணவன்

Published By: Daya

26 Mar, 2019 | 01:26 PM
image

டில்லியை சேர்ந்த 33 வயதான ரோகன் பாசின என்ற விமானி தான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டில்லியில் உள்ள பாடசாலையொன்றில் கற்றபோது அங்கு கற்பித்த ஆசிரியையை வித்தியாசமான முறையில் கௌரவித்துள்ளார்.

குறித்த விமானி தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட சுதா சத்யன் என்ற ஆசிரியை கௌரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டில்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான தலைவராக உயர இவரே காரணம் என பெருமையுடன் தெரிவித்துள்ளார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் என்ற ஆசிரியை ஆனந்த கண்ணீருடன் தனது மாணவனான விமானி ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.

கப்டன் ரோகனின் தாயார், ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது பாடசாலையில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும்.

தனது மகன் ரோகன் பாடசாலையில்  சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52