புதையல் தோண்டிய ஒன்பது பேர் கைது.!

Published By: Robert

17 Apr, 2016 | 03:00 PM
image

புதையல் எடுக்கும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த ஒன்பது பேரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வண்ணாத்திவில்லு காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் டேற்கொண்ட சுற்றவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அங்கிருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள், பூஜை பொருட்கள் பலவற்றுடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய சிறிய ரக வாகனம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்த காட்டுப்புலியன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதிக்க பகுதியிலேயே இவ்வாறு அகழ்வுப் பணியினை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்ற நபரைத் தேடிக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள வண்ணாத்திவில்லு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 20:53:02
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10