விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்

Published By: Daya

26 Mar, 2019 | 11:38 AM
image

மும்பையில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக பெண் பயணியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் ரக பயணிகள் விமானம் நேற்று மதியம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

அதில் 263 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், மும்பையில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார் இதனால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

 உடனடியாக, விமானத்தின் விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது. இன்று காலை சிங்கப்பூர் வான் பகுதிக்குள் விமானம் நுழைந்ததும், விமானப்படையின் உதவியுடன் அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

பயணிகள் அனைவரையும் உடனடியாக கீழே இறக்கி சோதனையிட்டனர். விமானத்தையும் முழுமையாக சோதனையிட்டனர்.  இந்த சோதனையில் விமானத்தில் எந்த வெடிபொருளும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் போலி என்பது தெரியவந்தது. 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, குழந்தையுடன் வந்த  பெண் ஒருவரிடம் பொலிஸார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52