நல்லூரில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் நினைவேந்தல்

Published By: R. Kalaichelvan

26 Mar, 2019 | 06:17 PM
image

இலங்கை நல்லூரில், ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கத்தின் நினைவேந்தல் மற்றும் அறக்கட்டளை தொடக்கவிழா நடைபெற்றது.

இலங்கையில் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவரும், சமய சொற்பொழிவாளரும், குப்பிளான் கிராமத்தின் அடையாளமுமாக திகழ்ந்தவர் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம். இவர், கடந்த பிப்ரவரி மாதம் 13ம் திகதி காலமானார். இவருடைய நினைவேந்தல் நிகழ்வு, இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நேற்று (24ம் திகதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை, அமரரின் மனைவி சாந்தா சிவ.மகாலிங்கம் நினைவுச் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வரும், சிவ.மகாலிங்கத்தின் மாணவருமான ச.லலீசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ‘சிவத்தமிழ் வித்தகம்’ என்ற நினைவு நூலை வெளியிட்டதுடன், ஆதீனம் சார்பாக அமரர் சிவ.மகாலிங்கத்திற்கு, தேகாந்த நிலையில் திருமந்திரக் கலாநிதி என்ற பட்டம் வழங்கி கவுரவித்தார். ஆதீன முதல்வருடன், வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் ம.வேதநாதன் ஆகியோர் இணைந்து விருது வழங்கினர்.

தொடர்ந்து, நல்லை ஆதீன முதல்வர், சின்மயா மிஷன் சிதாகாசனந்த சுவாமிகள், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், தமிழருவி த.சிவகுமாரன், அமரரின் சகோதரர் சிவ.பஞ்சலிங்கம், தமிழக எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி ஆகியோர் பிரார்த்தனை உரையாற்றினர். 

நிகழ்வில், யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் தாட்சாயணி கணேசநாதனின் தமிழிசைக் கச்சேரியும், ஆசிரியர் விதுஷா கோபிகிருஷ்ணாவின் வீணைக் கச்சேரியும் இடம்பெற்றன. கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன் நூலின் வெளியீட்டு உரையையும், அமரரின் புதல்வர்களான ம.அருளினியன் நிறைவுரையும், ம.அரவிந்தன் நன்றியுரையும் ஆற்றினர்.

அமரரின் புதல்வர் ம.அரவிந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிவத்தமிழ் வித்தகர் அறக்கட்டளையானது, திருமந்திர கற்கை ஊக்குவிப்பு, ஆன்மீக இளம் சொற்பொழிவாளர் ஊக்குவிப்பு, பின்தங்கிய பிரதேசங்களுக்கான மருத்துவ முகாம் நடத்துதல், குப்பிளான் கிராம கல்வி வளர்ச்சிக்கு பங்களித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56