தடையின் பின் களமிறங்கும் ஸ்மித் ; நான்காவது ஆட்டத்தில் பஞ்சாப் - ராஜஸ்தான்

Published By: Vishnu

25 Mar, 2019 | 02:53 PM
image

ஜெய்ப்பூரில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 

ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித் விளையாடுகிறார். நேற்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு தடை நீங்கி வந்த வேட்சன் தனது அதிரடியான ஆட்டமூலம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். 

இந் நிலையில் ஸ்டீவன் ஸ்மித்தும் ஓராண்டு கால தடைக்கு பின்னர் களமிறங்குவதனால், அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமுணையில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஹென்ரிகலை, டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளதனால் இப் போட்டியில் அதிரடிக்கு பஞ்சமில்லை.

இரு அணிகளும் இதுவரை 17 போட்டிகளில் மோதியுள்ளன. 

அதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

அத்துடன் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இதுவரை 29 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இருந்தாலும், அவர்களால் ஒரு வெற்றியைக்கூட இங்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35