ரஷ்யாவின் உதவி  ; தப்பிய ட்ரம்ப் இருள் அகற்றப்பட்டதென்கிறார் 

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 03:42 PM
image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவி செய்யவில்லையென சிறப்பு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா பாடுபட்டது என்று கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜேம்ஸ் கோமி விசாரணையை மேற்கொண்டு வந்தார்.

பின்னர் அவரிடமிருந்து விசாரணை நீக்கப்பட்டு, சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ரொபர்ட் முல்லரிடம் வழங்கப்பட்டது.

ரொபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்புக் குழு கடந்த 22 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது விசாரணை நிறைவடைந்து அதன் அறிக்கை, அமெரிக்க நீதித்துறையிடமும், அட்டோர்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் டொனால்ட் ட்ரம்ப் தனது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வொஷிங்டன் திரும்பினார்.

இதன்போது ஊடகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கையில், “ தனது நிர்வாகத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே தொங்கி கொண்டு இருந்த சந்தேகம் என்ற இருள், இறுதியில் அகற்றப்பட்டுள்ளது.”  "ரொபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை" எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33