விதிமுறைகளை மீறி அகழப்படும் கிரவல்,  நூற்றுக்கணக்கான வனங்கள் அழிப்பு

Published By: Digital Desk 4

25 Mar, 2019 | 11:50 AM
image

ஒருபுறம் இயற்கையை வளங்களை பாதுகாக்குமாறு நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கும் அதேவேளை மறுபுறம் அதற்க்கு எதிரான செயற்பாடுகள் அரச திணைக்களங்களது சிபாரிசுடன் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை பல்வேறு சம்பவங்களும் ஏற்படுத்திவருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறும் மணல் அகழ்வு கிரவல் அகழ்வு கருங்கல் அகழ்வு மரக்கடத்தல் என நீண்ட பட்டியல் காணப்படுகிறது.

குறிப்பாக கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது.அதிகாரிகள் கண்டுகொள்ளாது இருக்கிறார்கள் ஏன் இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக குறித்த இடத்திற்கு சென்றபோது  வழங்கப்பட்ட அனுமதிக்கு மேலதிகமாக கிரவல் அகழப்படுவதை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு நிதி செலுத்தப்பட்டு அனுமதி பெறப்பட்டே கிரவல் அகழப்படுகின்றது.எனினும், A9 வீதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டு கிரவல் அகழப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.பல்வேறு தேவைகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு இங்கிருந்து கிரவல் ஏற்றிச்செல்லப்படுகின்றது.

குறிப்பாக கிறவல் அகழும்போது பாரிய மரங்கள் அழிக்கப்படுகின்றன மரங்கள் அழிக்கப்படும் போது வனவள திணைக்களம் வேடிக்கை பார்க்கிறது காட்டில் விறகு கொத்துபவர்களை பிடிப்பவர்கள் இவ்வாறு பாரிய அழிவை ஏற்படுத்தும் பணக்காரர்களை கண்டுகொள்ளாதது ஏன் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .

இதேபோன்று பல ஆண்டுகளாக குறித்த பகுதியில் பல ஏக்கர் காணிகள், காடுகள் அழிக்கப்பட்டு பாரிய குழிகள் தோண்டப்பட்டும் இன்றுவரை அவை மூடி மீள் மரநடுகை மேற்கொள்ளாதபோது புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் இந்த செல்வந்தர்களுக்கு அனுமதிகளை தொடர்ந்து எவ்வாறு வழங்குகின்றனர் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு குறித்த சம்பவங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள  தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்ப படிவங்களை கொண்டு சென்றால் அவற்றை ஏற்க பின்னடிக்கும் யாழ் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியம் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பியும் அதற்கும் பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51