ஐதராபாத்தின் வெற்றியிலக்கை துரத்தியடித்த கொல்கத்தா

Published By: Vishnu

25 Mar, 2019 | 11:24 AM
image

ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது போட்டி நேற்று மாலை 4.00 மணியளவில் கொல்கத்தா எடன் கார்டண்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையே இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 181 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் தடை நீங்கி வந்த டேவிட் வார்னர் 53 பந்துகளில் 3 ஆறு ஒட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அதிரடியாக 85 ஓட்டங்களையும், சாவ்லா 35 பந்துகளில் 39 ஓட்டங்களையும், யூசப் பதான் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், விஜய் சங்கர் 24 பந்துகளில் 2 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 40 ஓட்டத்துடன் மனீஷ் பாண்டி 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் ரஸல் 2 விக்கெட்டுக்களையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 182 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில் ஐதராபாத் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

கொல்கத்தா அணி சார்பில் கிறிஸ் லின் 7 ஓட்டத்துடனும், நிதிஷ் ராணா 47 பந்துகளில் 8 நான்கு ஓட்டம், 3 ஆறு ஒட்டம் அடங்களாக 68 ஓட்டத்துடனும், ரோபின் உத்தப்பா 27 பந்துகளில் 3 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 35 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், ரஸல் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்களாக 49 ஓட்டத்துடனும், ஷுப்மான் கில் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி கொல்கத்தாவின் வெற்றிக்கு வலிவகுத்தனர். 

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் சஹிப் அல்ஹசன், ரஷித் கான், சண்டீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21