தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற மக்கள் கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்காக மேலதிக பஸ் சேவையை இன்று முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு விசேட புகையிரத சேவை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

பஸ் சேவைகளில் எவ்வித பிரச்சினைகள் காணப்படுமாயின்  1955, 011 1333 222 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தமது முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்  என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.