மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் 6ம் குறுக்குத் தெருவிலுள்ள வீடொன்றின் பின்புறத்திலிருந்து மூன்று கிறனைட் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்றிரவு குழாய் நீர் பொருத்துவதற்காக நிலத்தை வெட்டிக் கொண்டிருந்தபோதே குறித்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

பின்னர் இன்று காலை ஸ்தலத்திற்கு விரைந்த சொகோ பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். 

- ஜவ்பர்கான்