15 மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 350 வீடுகள் நிர்மாணிப்பு

Published By: Digital Desk 4

24 Mar, 2019 | 11:48 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் 15 மாதங்களில் 54 கிராமங்களில் ஆயிரத்து 350 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கே.கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தால் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு கட்டமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் செயற்திட்டத்தின் கீழ் செமட்ட செவன வீட்டுத் திட்டத்தின் ஊடாக 2018 ஆம் ஆண்டு 42 கிராமங்களில் ஆயிரத்து 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டின் இது வரையான 3 மாதங்களில் 12 கிராமங்களில் 300 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளும் ஏழு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது. 

இத் திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சனைகள் கணிசமாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38