எளிமையாக பழகுவது, கதையை கேட்கும் முன் தனக்குள் எந்த எல்லையையும் வைத்துக் கொள்ளாமல் மனதை திறந்து வைத்திருப்பது, மூத்த மற்றும் சக நடிகர்களுடன் இனிமையாக பழகுவது, தொழில்நுட்ப கலைஞர்களின் கஷ்ட நட்டங்களை தெரிந்து வைத்திருப்பது, தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் சிறந்தவற்றை தெரிவு செய்வது, சொன்ன வாக்கை காப்பாற்றுவது என பல விடயங்களை உறதியாக பின்பற்றுவதால் விஜய் சேதுபதி திரையுலகில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

எந்த தயாரிப்பாளரையும் மரியாதை குறையாமல் பேசுகிறார். பட தயாரிப்பு மற்றும் பட வெளியீட்டில் ஏதேனும் சிக்கல் என்றால் தன்னால் முடிந்த உதவிகளை தயக்கமின்றி உடனடியாக செய்வது, மற்ற இயக்குநர்களின் படைப்புகளை மனந்திறந்து பாராட்டுவது, அதை அவர்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் போது அதையும் அனுமதிப்பது என பல காரியங்களை செய்து வருவதால் சினிமா முதான விஜய் சேதுபதியின் நேசிப்பை மற்றவர்களும் அறிந்து பாராட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இவரை தற்போது சின்ன தல என்று அன்புடன் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அத்துடன் ரசிகர்கள் நற்பணி இயக்கத்தையும் அனுமதித்து, அதன் மூலமாகவும் சமூகத்திற்கு தன்னாலான பணிகளை செய்து வருகிறார்.

தற்போது கூட சென்னையில் பின்னி மில்லில் நடைபெற்று வரும் 'ஆண்டவன் கட்டளை' படபிடிப்பின் போது தனக்கு டூப் போட்டு நடித்த சண்டை பயிற்சி நடிகருக்கு யாருக்குத் தெரியாமல் உதவியிருக்கிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் சேதுபதியை 'சின்ன தல' என்று அழைப்பது தவறில்லையோ என தோன்றுகிறது. இதனிடையே இறங்கு முகத்தில் இருந்த தனக்கு 'நானும் ரவுடி' தான் என்ற படத்தின் மூலம் வெற்றியை அளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடிக்க கதையை கேட்காமல் ஒப்புக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.