சைவ மக்களின் காணி­களை சுவீ­க­ரிப்­பது அநீ­தி­யா­னது - கலா­நிதி ஆறு திரு­மு­ருகன் கண்­ட­னம்

Published By: Daya

23 Mar, 2019 | 12:15 PM
image

யாழ்ப்­பா­ணம், கீரி­மலை நகு­லேச்­சரத்தில் சைவ மக்­க­ளின் நிலங்­களை அரசு சுவீ­க­ரிக்க முயற்சி செய்­வ­தும், ஆன்­மி­கச் சூழலை சுற்­றுலா மைய­மாக அமைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ள­மை­யும் அநீ­தி­யான செயல் இதனை உடன் தடுத்து நிறுத்த வேண்­டும். இவ்­வாறு அகில இலங்கை இந்து மாமன்ற உப தலை­வ­ரும் தெல்­லிப்­பழை  துர்க்­கா­தேவி ஆல­யத் தலை­வ­ரு­மான கலா­நிதி ஆறு திரு­மு­ருகன் தெரி­வித்­துள்ளார். 

சரித்­திர முக்­கி­யத்­து­வம் மிக்க கீரி­மலை நகு­லேச்­சர சூழ­லில் கீரி­மலை காங்­கே­சன்­துறை வீதி­யி­லுள்ள கோவில்கள், தனி­யார் நிலங்­கள், சமய நிறு­வ­னங்­க­ளின் நிலங்­க­ளைக் கடந்த 25 ஆண்­டு­க­ளுக்கு மேல் உயர் பாது­காப்பு வல­யம் எனக் கூறி மக்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­காத அரசு தற்போது அந்­தப் பிர­தே­சத்தை சுவீ­க­ரிக்­கத் திட்­ட­மி­டு­வது மிக அநீ­தி­யான செய­லா­கும்.

சித்­தர்­க­ளின் சமா­தி­கள், சடை­யம்மா மடம், கிருஷ்­ணன் கோவில், சிவன் கோவில், பாதாள கங்கை தீர்த்­த­சேத்­திரம், கதி­ரை­யாண்­ட­வர் கோவில் உட்­பட அப்­பாவி மக்­க­ளின் நிலத்­தைச் சுவீ­க­ரிக்­கத் திட்­ட­மி­டு­வது மிகத் துரோ­க­மான செய­லா­கும்.

நீண்­ட­கா­ல­மாக வலி.வடக்கு மக்­கள் இந்­தப் பகு­தியை கைய­ளிக்­கு­மாறு விடுத்த வேண்­டு­த­லுக்கு அரசு செய்­யும் கைமாறு இது­தானா? இவ்­வி­ட­யம் தொடர்­பாக தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.

இந்து கலா­சார அமைச்­சர் இவ்­வி­ட­யத்­தில் உடன் அக்­கறை எடுக்­க­வேண்­டும்.

காங்­கே­சன்­து­றை­யில் ஹோட்­டல் அமைத்து வாணிபம் செய்­யும் அப்­பாவி மக்­க­ளின் நிலங்­கள் மற்­றும் சுக்­கி­ர­வார திரு­கோணச் சத்­தி­ரம் அறக்­கட்­ட­ளை­யின் 106ஏக்­கர் நிலம் யாவும் விரை­வில் கைய­ளிக்க வேண்­டி­யது அர­சின் கட்­டாய கட­னா­கும் என அவர் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50