மன்னார் மனித புதைகுழி அறிக்கை தொடர்பில் மேலும் பல தீர்மானங்கள் - சட்டத்தரணி நிறைஞ்சன்

Published By: Daya

23 Mar, 2019 | 11:22 AM
image

மன்னார் மனித புதை குழியின் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு,குறித்த கலந்துரையாடலின் போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட ஆணையாளர்கள், சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, போராசிரியர் ராஜ் சோம தேவ, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை தேடும் சங்க பிரதி நிதிகள், அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டம் நிறைவடைந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் அவ்வாறு தெரிவித்தார்.

குறித்த அறிக்கையானது இடைக்கால அறிக்கை என்பதினால் இதனை வைத்துக்கொண்டு முடிவெடுக்க முடியாது என்பதன் அடிப்படையில், பல அறிக்கைகள் வர இருக்கின்றமையினால் அதற்கான நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பி எடுப்பதாக  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பேராசிரியர் ராஜ் சோமதேவவிள் அறிக்கையினை பெற்றுக் கொள்ளுவதாகவும், இவ்விடையம் தொடர்பாக வைத்தியர்களின் அறிக்கைகளை அதாவது காயப்பட்டது எவ்வாறு?, இதில் என்ன நடை பெற்றுள்ளது? போன்ற அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, அனைத்து அறிக்கைகளையும் முழுமையாக வைத்துக் கொண்டு குறித்த நடவடிக்கையினை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருவதாகவும், அதனைத் தொடர்ந்து குறித்த மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புகளின் மாதிரிகளை மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி அதற்கான பதில்களை பெற்றுக் கொள்வதா? என கூடி முடிவு எடுக்கப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகளில் ஒருவரான வீ.எஸ்.நிறைஞ்சன் தெவித்தார்.

எதிர்வரும் மூன்று மாத காலத்தில் அதற்கான அறிக்கையினை பேராசிரியர் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள் எதிர் வரும் ஒரு வார காலத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்பில் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிடைக்கப் பெறுகின்ற அறிக்கைகளை வைத்துக்கொண்டு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும். 

சிறுவர்களுடைய எலும்புகள், அல்லது கைவிலங்கிடப்பட்ட எலும்புகள் மற்றும் குவியலாகக் கிடந்த எலும்புகள் போன்றவற்றில் இருந்து எடுக்க முடியுமா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியாக அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதாக கூறப்பட்ட போதும், அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வாகனத்தில் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56