புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகத்தவர்களுக்கு விற்கும் நடவடிக்கை தொடர்பில் கைதான 12 பேர் தொடர்ந்தும் தடுப்பு காவலில்

Published By: Vishnu

22 Mar, 2019 | 08:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 

புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடுப்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02