யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கால்பந்தாட்டத்தில் 3 பிரிவுகளிலும் சம்பியன்

Published By: Priyatharshan

22 Mar, 2019 | 08:07 PM
image

யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட கால்பந்தாட்டத் தொடரில் 3 பிரிவுகளிலும் வெற்றிபெற்று யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது.

யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான கால்ப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி யாழ். மத்திய கல்லூரி அணியை 04:00 என்ற  கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சார்பாக லியோ 3 கோல்களையும் றொவான்ஸன் ஒரு கோலையும் போட்டனர்.

இதேவேளை, 18 வயது பிரிவில் யாழ் மத்திய கல்லூரி அணியினர் சமூகளிக்காத காரணத்தினால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் சாந்தனின் சிறப்பான ஆட்டத்தினால் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பிரிவினருக்கான  கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போதிட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரியை 01: 00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனானது.

3 பிரிவுகளுக்குமான போட்டி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35