கர்நாடக கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர்  எண்ணிக்கை 14 ஆக உயர்வு

Published By: Vishnu

22 Mar, 2019 | 10:07 AM
image

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் ஏற்பட்ட கட்டட விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடிகளை கொண்ட தனியார் வணிக வளாக கட்டடம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதனால் கட்டட இடிபாடுகளுக்குள்  100 க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவம் நடந்த முதல் நாளில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 60 க்கும் மேற்பட்டோர்களை தீயணைப்பு படையினர், பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். முதல் நாளில் 2 உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் 2 ஆவது நாள் மீட்பு பணியின்போது 5 உடலங்களும். நேற்று 3 ஆவது நாள் மீட்பு பணியின்போது 6 சடலங்களுமாக மொத்தம் 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் இன்று 4 ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35