ஈராகில் படகு கவிழ்ந்ததில் 70 பேர் பலி  ; 20 பேர் மாயம்

Published By: Digital Desk 4

21 Mar, 2019 | 10:59 PM
image

ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த  71 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  விபத்தில் மேலும் 20 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

எனினும், படகில் சிக்கியிருந்த எஞ்சியவர்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ள நிலையில், குறித்த படகு ஒரு சுற்றுலாத் தீவுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் பாதிக்கபட்டோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17