புதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro இலங்கையில் அறிமுகம்

21 Mar, 2019 | 05:58 PM
image

Vivo இலங்கையில் தனது புத்தம் புதிய V15Pro ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. 

NEX மாதிரிக்கு பின்னர் துறையின் முதலாவது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய முன்புற Elevate ஆன கமராவை கொண்ட தொலைபேசியாக V15Pro அமைந்துள்ளது. 

முழுத்திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக அமைந்துள்ளதுடன் மதிநுட்பமான பிரத்தியேக உதவி அம்சங்களை கொண்டதுடன், பாவனையாளரை புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்ததாக அமைந்துள்ளது.

Vivo ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது பிரதான பெறுமதிகளில் ஒன்றாக புத்தாக்கம் அமைந்துள்ளது. துறையின் முதலாவது Elevate ஆன கமராக்கு மேலாக, ஒப்பற்ற bezel-less திரையை கொண்டுள்ளது. எமது சாதனங்களில் எப்போதும் நாம் புத்தாக்கமான உள்ளம்சங்களை இணைக்க எதிர்பார்க்கிறோம். அதாவது, உயர் தரம் வாய்ந்த கமராக்கள் மற்றும் மதிநுட்பமான AI சேவைகள் போன்றன மொபைல் அனுபவத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளன. V15Pro  என்பது நுகர்வோரின் சகல விதமான வாழ்க்கை அங்கங்களுக்கும் ஒப்பற்ற மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பின் தெளிவான உதாரணமாக அமைந்துள்ளது.” என்றார்.

Elevate ஆன முன்புற கமராவுடன் பாரிய திரை

NEX இல் காணப்படும் அதே முன்புற Elevate ஆன கமரா காணப்படுவதுடன் அதை விட சிறந்ததாக அமைந்துள்ளது. V15Pro இல் 32MP முன்புற கமரா காணப்படுவதுடன் சிறந்த selfie களை எடுப்பதற்கு உகந்தது. வடிவமைப்பு மேம்படுத்தல்கள் காரணமாக, கமரா சகல நிலைகளையும் தாங்கிக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. அதன் Super AMOLED Ultra FullViewTM திரை உடன் 91.64 வீத screen-to-body ratio ஐ கொண்டுள்ளது. இது கேமிங் மற்றும் வீடியோ பார்வையிடலுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

AI Triple கமராவுடன் புகைப்படங்கள் செம்மையானவையாக அமைந்துள்ளன

AI Triple கமராவுடன் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடிவதுடன், பரந்தளவு 48 48 Million Quad Pixel Sensor, 8MP AI Super Wide-Angle Camera  மற்றும் 5MP Depth கமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புற கமரா கொண்டுள்ள “four-in-one pixel” தொழில்நுட்பம் ஊடாக நான்கு pixel களை இணைத்து ஒரு large pixel ஆக இரவு நேரத்திலும் தெளிவான 12MP புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. AI Super Wide-Angle கமரா 120 பாகை வரை நீடித்துக் கொள்ளக்கூடியது.

V15Pro இல் AI Face Beauty, AI Portrait Framing மற்றும் AI Super Night Mode உள்ளம்சங்கள் அடங்கான AI புகைப்பட உள்ளம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றினூடாக, வெவ்வேறு ஒளிமட்டங்களில் தெளிவான படங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

In-Display Fingerprint Scanning தொழில்நுட்பம்

புகழ்பெற்ற In-Display Fingerprint Scanning தொழில்நுட்பத்தை V15Pro  தன்வசம் கொண்டுள்ளது. தற்போது 5ஆம் தலைமுறையாக இது அமைந்துள்ளது. உயர் fingerprint pixel density உடனும் algorithm  உடனும் பாவனையாளர்கள் தமது கையடக்க தொலைபேசியை பாதுகாப்பான வகையில் unlock செய்யலாம்.

AI உடனான மிருதுவான பாவனையாளர் அனுபவம்

V15Pro இல் பக்கத்தில் காணப்படும் புதிய ஸ்மார்ட் பொத்தானை பயன்படுத்தி AI  ஐ அனுபவிக்கவும். ஒரு தடவை அழுத்தினால் Google Assistant செயற்படுத்தப்படும். இரு தடவைகள் அழுத்தினால் Jovi Image Recognizer செயற்படுத்தப்படும்.

V15Pro தனது சொந்த மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க குரல் ஆணை கட்டமைப்பை கொண்டுள்ளது. Google உடன் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளதால் உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் செவிமடுக்கக்கூடியது.

மேம்படுத்தப்பட்ட Game Mode 5.0 ஐ கேம் ரசிகர்கள் வரவேற்பார்கள். புதிய Competition Mode ஐ கொண்டுள்ளதால் game performance மற்றும் Dual-Turboஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கிறது. இது frame-drop ஐ 300 வீதத்தால் குறைத்து மிருதுவான கேம் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

V15Pro இல் Snapdragon 675AIE Octa-core புரொசெசர் காணப்படுவதுடன் 6GBRAM + 128 ROM அடங்கியுள்ளன.

இதனூடாக மிருதுவான செயற்பாடு உறுதி செய்யப்படுகிறது. நவீன இரட்டை-என்ஜின் வேகமான சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தினூடாக 15 நிமிடங்களில் 25 வீதம் சார்ஜ் செய்யும் வசதி காணப்படுகிறது.

V15Pro Topaz Blue தெரிவு 2019 மார்ச் 14 ஆம் திகதி முதல் இலங்கையில் அறிமுகம் செய்யப்படும்.

Vivo பற்றி

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக Vivo தற்போது திகழ்வதுடன் புத்தாக்கமான ஸ்மார்ட் மொபைல் சாதனங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. Vivo தனது சாதனங்களின் தரத்தை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நோக்கில், பரந்தளவு ஆய்வு நிலையங்கைள கொண்டுள்ளது. அமெரிக்கா (சான் டியாகோ) மற்றும் சீனா (டொங்குவான், ஷென்சென், நான்ஜிங், பீஜிங் மற்றும் ஹங்ஸு) நாடுகளில் இவை அமைந்துள்ளன. இந்த நிலையங்களில் 5G, AI, mobile photography மற்றும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்ஃபோன் அலங்காரம் போன்ற நவீன நுகர்வோர் தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றன.

2017 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய ரீதியில் சுமார் இரண்டு மில்லியன் பாவனையாளர்கள் Vivo சாதனங்களையும் சேவைகளையும் உலகளாவிய ரீதியில் அனுபவித்திருந்தனர். Vivo தற்போது உலகளாவிய ரீதியில் 18 சந்தைகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன் 1000க்கும் அதிகமான நகரங்களில் விற்பனை நிலையங்களையும் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26