மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் இன்றுவரை 1324 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் 713 மோட்டார் சைக்கிள் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர முச்சக்கர வண்டி சாரதிகள் 413 பேர், கார் சாரதிகள் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

மேலும் நேற்று காலை இருந்து இன்று காலை வரையான 24 மணித்தியாலத்திற்குள் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய 268 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 10ம் திகதி குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட நடவடிக்கைளை பொலிஸார் ஆரம்பித்தனர்.