இலங்கையின் உயர் மட்ட அரசியல் தலைமைக்கு கண்டனம்- சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி குறித்து அதிருப்தி- மனித உரிமை ஆணையாளர்

Published By: Rajeeban

20 Mar, 2019 | 07:50 PM
image

யுத்தத்திற்கு பிந்திய நிலைiமாற்று நீதி நடைமுறைக்கு நிலையான கால அட்டவணையுடன் கூடிய முழுமையான  தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துமாறு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளார்

சுயாதீன உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்துவதே அடுத்த முக்கியமான நடவடிக்கையாக அமையவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஜெனீவாவில் இன்று இலங்கை குறித்த அறிக்கையை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்த பின்னர் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மனிதாபிமான உரிமை மீறல்கள் ஆகியவற்றை பாரதூரமான முறையில் மீறியதாக குற்றம்சாட்டப்படும் சவேந்திர சில்வாவிற்கு இலங்கை இராணுவத்தில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்லெட்  இது கவலைதரும் விடயம் என தெரிவித்துள்ளார்

வடக்குகிழக்கில் இராணுவத்தினரின் பிடியிலுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இந்த முக்கியமான நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்ச்சியாகவும் முழுமையானதாகவும் துரிதப்படுத்தப்பட்டதாகவும் அமையவேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

இலங்கையின் உயர்மட்ட தலைமைத்துவத்திடம் பொதுவான நோக்கம் இல்லாமையே தாமதங்களிற்கு காரணம் போல தோன்றுகின்றது எனவும் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கை அரசாங்கத்தின் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் தனது அலுவலகத்துடனான பேண்தகு ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்கின்றது என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்

இழப்பீடுகளிற்கான அலுவலகத்தை அமைப்பதை தான் பாராட்டுவதாகவும் இந்த அலுவலகத்திற்கு ஆணையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்திருப்பதாகவும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்

ஆரம்ப தாமதங்கள் காணப்பட்டாலும் காணமல்போனவர்கள் குறித்த அலுவலகம் செயற்பட ஆரம்பித்துள்ளதை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இரு அலுவலகங்களும் சுயாதீனமாகவும் வினைத்திறனுடனும் செயற்படுவதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை எனது அலுவலகம் கேட்டுக்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13