சர்வதேச நீதிபதிகள் சாத்தியமில்லை ; ஜெனிவாவில் திட்டவட்டமாக  திலக் மாரப்பன 

Published By: Vishnu

20 Mar, 2019 | 09:43 PM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இலங்கை பிரஜைகள் அல்லாத  வெளிநாட்டு நீதிபதிகள் இலங்கையின்  வழக்கு செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டுமாயின்  அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படவேண்டும். அந்த அரசியலமைப்பு திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்  நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.   அது கடினமானது. எனவே இலங்கையானது உள்ளகப் பொறிமுறையில் இந்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு  சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்  என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.  

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று நடைபெற்ற  இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு   உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றகையில்;

இலங்கையில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் அலுவலகம் அமைக்கப்படுவது அவசியமற்றது என்றே இலங்கை அரசாங்கம் கருதுகின்றது.  அதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

அத்துடன் 2017 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம்  மனித  உரிமை விடயத்தில் பாரிய முன்னேற்றங்களை வெளிக்காட்டியிருக்கின்றது.  ஐ.நா. ஆணையாளரின் அறிக்கையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில்   வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நன்றி கூறுவதுடன், ஐக்கியநாடுகள்  சபை, மனித உரிமை பேரவையின் நிபுணத்துவ ஒத்துழைப்பை வரவேற்கின்றோம். 

குறிப்பாக தொழில்நுட்ப உதவிகளை வரவேற்கின்றோம்.  நாம் தொடர்ந்து  ஐ.நா. மனித உரிமை ஆணையாளருடனும் ஐ.நா.மனித உரிமை பொறிமுறையுடனும் இணைந்து செயற்பட  விரும்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43