கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.

கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று காலையும் 10 கிராம் கஞ்சா போதைப் பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.