ஒப்பந்தத்தின்படி இந்தியா பாகிஸ்தானுடன் மோத வேண்டும் - ஐ.சி.சி.

Published By: Vishnu

20 Mar, 2019 | 01:04 PM
image

எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மோத வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய மத்திய ரிசர்வ் பொலிஸ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாக ஒரு சில சர்வதேச விளையாட்டுகளை இந்தியா நடத்த முடியாமல் போனது.

அத்துடன் இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தானுடான போட்டிகளில் இந்தியா விளையாடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியமும்  பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசின் முடிவில்தான் உள்ளது எனத் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று  ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன்,

ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து நாட்டு உறுப்பினர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்தியிட்டுள்ளனர். 2019 உலககோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அப்படி விளையாடாமல் போவது விதிமுறைக்கு மாறானது. ஒரு அணி மற்ற அணிகளுடன் விளையாடாமல் போனால் அதற்கான புள்ளிகள் எதிர் அணிக்கு வழங்கப்படும்.

இந்திய வீரர்கள் சமீபத்தில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியது பலியான வீரர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதாகும். நாங்கள் விளையாட்டுடன் அரசியலை கலக்க விரும்பவில்லை. இது ஐ.சி.சி.யின் தெளிவான குறிக்கோள் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20