தென் ஜப்­பானை வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவு கடந்த நிலையில் தாக்­கிய அதி சக்­தி­வாய்ந்த 6.4 ரிச்டர் பூமி­ய­திர்ச்­சியிலும் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற 7.3 ரிச்டர்   பூமி­ய­திர்ச்­சியிலும் சிக்கி குறைந்­தது 29 பேர் பலி­யா­ன­துடன் 1000 ற்கும் அதிகமானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

காய­ம­டைந்­த­வர்­களில் பலரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக மருத்­து­வ ­மனை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இந் தப் பூமி­ய­திர்ச்­சிகளால் கட்­ட­டங்கள் பலவும் இடிந்து விழுந்­த­துடன் மின்­சார இணைப்­பு­களும் சேதத்­துக்­குள்­ளா­கியுள்­ளன.

இந்­நி­லையில் இடிந்து விழுந்த கட்­ட­டங்­களின் இடி­பா­டு­களின் கீழ் மேலும் பலர் சிக்­கி­யி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.

இந்த பூமி­ய­திர்ச்­சிகளால் பல வீடுகள் இடிந்து விழுந்­த­துடன் இரு தீ அனர்த்த சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.