மாகாணங்களுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து தேசிய அணியில் ஒருவர் இணைய வாய்ப்பு 

Published By: Priyatharshan

16 Apr, 2016 | 10:38 AM
image

19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான மாகா­ண­மட்ட கிரிக்கெட் தொடர் ஒன்றை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் நடத்த ஏற்­பாடு செய்யப்­பட்­டுள்­ளது. இந்தத் தொடர் எதிர்­வரும் 19ஆம் திகதி முதல் மே மாதம் 2ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

தேசிய அணிக்­கான வீரர்­களை இந்த வய­தி­லி­ருந்தே தயார்­ப­டுத்­து­வதே இந்தத் தொடரின் முக்­கிய நோக்­க­மாக கரு­தப்­ப­டு­கி­றது. அதே­வேளை, இந்தத் தொடரின் மூலம் அதீத திற­மை­களை வெளிப்­ப­டுத்தும் வீரர் இங்­கி­லாந்­திற்கு சுற்றுப்பயணம் மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை அணி­யுடன் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவார்.

இணைத்துக் கொள்­ளப்­படும் வீரரை வெறுமனே மைதா­னத்­திற்கு வெளியே ஆச­னத்தில் அமரச் செய்­து­விட்டு போட்­டியை பார்த்­துக்­கொண்­டி­ருக்க விடாமல், விளை­யாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்­கப்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கான கிரிக்கெட் தொடரை அறி­மு­கப்­ப­டுத்தும் நிகழ்வு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் மோது­கின்­றன.

ஆரம்பகட்டப் போட்­டிகள் 2 நாட்கள் கொண்ட போட்­டி­க­ளாக நடை­பெ­ற­வுள்­ளன. அதன்­பி­ற­கானஇ இறுதிப் போட்டி ஆர்.பிரே­ம­தாச விளை­யாட்­டரங்கில் 3 நாட்கள் கொண்ட போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

19 வய­திற்­குட்­பட்­டோருக்­கி­டையே நடை­பெறும் போட்­டி­யென்­பதால் இரு­ப­துக்கு 20 போட்­டியை இதில் நடத்த முடி­யாது என்றும்இ 2 நாட்கள் கொண்ட போட்­டியை நடத்தும் பட்­சத்தில் கிரிக்­கெட்டை தொழில்­நுட்ப ரீதி­யாக இளம் வீரர்கள் அணு­கு­வார்கள் என்றும் அதன் மூலம் நிறைய அவர்கள் கற்­றுக்­கொள்ள முடியும் என்­ப­தையும் திலங்க சும­தி­பால சுட்­டிக்­காட்­டினார்.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த அணி­களும் பங்­கு­பற்­று­கின்றமை விசேட அம்­ச­மாகும். அதேபோல் சப்­ர­க­முவ மாகா­ணத்தில் அணி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு போது­மான வச­திகள் இல்­லா­மையினால் இரத்தி­ன­புரி மாவட்ட வீரர்கள் ஊவா மாகா­ணத்தைப் பிர­தி ­நி­தித்­து­வப்­ப­டுத்தி விளை­யா­டு­வார்கள் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தத் தொடரை நடத்த 23 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20